ரோகித். சுப்மன் கில் அபாரம்...நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

ரோகித். சுப்மன் கில் அபாரம்...நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர்.  இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தனர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். 

ஒரு கட்டத்தில் 26 ஓவரில் 212 ரன் அசைக்க முடியாத நிலையில் இருந்த போது இருவரும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து அடுத்தடுத்து  விக்கெட்டுகள் வீழ்ந்ததும் மளமளவென ரன் ரேட்டும் குறைந்தது.  சிறிது நேரம் அதிரடி காட்டிய பாண்ட்யா 37 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. 

இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும், பாண்ட்யா 54 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பிளெய்ர் டிக்னர், ஜேக்கப் டல்ப்பி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலெனும், டெவான் கான்வேயும் களம் இறங்கினர். ஆனால் தொடக்கத்திலேயே ஆலெனை பாண்ட்யா போல்டாக்கினார். 

இதையடுத்து கான்வேயுடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. ஒரு முனையில் கான்வே நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் நிக்கோல்ஸ் 42 ரன், டேரில் மிட்செல் 24 , உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.  

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.  அந்த அணி 41.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  295 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு  ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 

இந்திய அணி தரப்பில் தாக்கூர், குல்தீப் தலா 3 விக்கெட்டும், சஹால் 2 விக்கெட்டும், பாண்ட்யா, உம்ரான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மேலும் தரவரிசையிலும் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்