பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடிவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் வாசோ ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் மூன்றாவது மாநில அளவிலான சோழ தேச கோப்பை சிலம்ப போட்டி நடைபெற்றது.
இதில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்ற மூன்று வயது குழந்தை சிலம்பம் சுற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த குழந்தைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குழந்தை சிலம்பம் சுற்றும் காணொலி வைரலாகி வருகிறது.