நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு:

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு:

இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. இதில் தேசிய அளவில் உள்ள

ரயில்வேகளுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. 

இதில், மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் ரயில் நிலைய பயண சீட்டு அலுவலர் எமில் ராபின் சிங் 8 பதக்கங்கள் வென்றுள்ளார். 

நான்கு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார். 

இவரது சாதனையை அறிந்த ,மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் அவரை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார். 

அவருடன்  முது நிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி எம். இசக்கி ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்