17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்..!

17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்..!

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 

அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அங்கு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் இன்று (நவம்பர் 27) இஸ்லமாபாத் வந்தடைந்தனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள்  முழு விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஸாக் கிராலி, ஒல்லி போப்,பென் டக்கெட், லயம் லிவிங்ஸ்டன், பென் ஃபோக்ஸ், வில் ஜாக்ஸ், கீட்டான் ஜென்னிங்ஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேமி ஓவர்டன், ஒல்லி ராபின்சன், மார்க் வுட் மற்றும் ரிஹான் அகமது ஆகியோர் உள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்று அங்கு விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்