ஃபிஃபா கால்பந்து போட்டி: சவுதி அரேபியா அணியினருக்கு ரோல்ஸ் ராய்ஸ் பரிசு..!

ஃபிஃபா கால்பந்து போட்டி: சவுதி அரேபியா அணியினருக்கு  ரோல்ஸ் ராய்ஸ் பரிசு..!

ஃபிஃபா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியினருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து போட்டியில் கடந்த 22ம் தேதி அர்ஜென்டினா - சவூதி அரேபிய அணியினர் மோதின.

இதில் 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சவூதியில் அடுத்த நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவித்தார் சவூதி மன்னர் சல்மான்.

இதனை தொடர்ந்து அணியில் விளையாடிய அனைவருக்கும் தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

இந்திய மதிப்பில் இந்த காரின் விலை ரூ.9 கோடியாகும்.

லீக் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதற்கே சவூதி மன்னர் இந்த பரிசை தருகிறார் என்றால் அரையிறுதி போட்டியில் சவுதி அணியினர் வெற்றி பெற்றால் என்ன பரிசு தருவாரோ என்று கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்