பிரபல கால்பந்து நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்.. குழப்பத்தில் நெட்டிசன்கள்!

பிரபல கால்பந்து நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்.. குழப்பத்தில் நெட்டிசன்கள்!

இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப்போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போகிறேன் என்று எலான் மஸ்க் கூறினார். அதனைதொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் அறிவித்தார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தின் விளைவுகள் எதும் அறியாமல் அதனை வாங்க் போவதாக எலான் மஸ்க் பேசி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தற்போது இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “தெளிவாக சொல்கிறேன். நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் “நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என அறிவித்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து பின்னர் ரத்து செய்தது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்