தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் தோனி...!

தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் தோனி...!

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் தேசியக்கொடியை முகப்பு படமாக தோனி மாற்றியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 

கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை அவர் பதிவேற்றம் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்