காமன்வெல்த் போட்டி - பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் விருந்து

காமன்வெல்த் போட்டி - பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் விருந்து

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று விருந்தளிக்கிறார். 

பிரதமர் மோடி இன்று காலை 11:00 மணிக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்கவுள்ளார்.

காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் "ஆட்டோகிராப்" வாங்குவேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்கவுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்