செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசு அறிவிப்பு...!

செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசு அறிவிப்பு...!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ”பி” மற்றும் ”ஏ” அணிகளுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். இதில், உலகளவில் 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தமிழ்நாடு அரசு நடத்தி வந்த நிலையில் போட்டியின் நிறைவு விழா நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் 'இந்திய பி அணியும் பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதனைதொடர்ந்து போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை சிறப்பிக்கும் வகையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணி (பெண்கள்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்