பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர். இவர் தனது 29 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர். இவர் தனது 29 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆண் நண்பர் மற்றும் அம்மாவுடன் பிறந்த நாள் விருந்து என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை பலரும் தவறாக ஃபாக்னரை ஓரினச்சேர்க்கையாளர் என்று புரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஜேம்ஸ் ஃபாக்னர் ஓரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து வாழ்த்தியது.
இவ்வாறு தனது இன்ஸ்டா பதிவை பலரும் தவறாக எடுத்துக் கொண்டதை அறிந்த ஃபாக்னர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் நேற்று இரவு தான் பதிவிட்ட போட்டோவை பலரும் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். தான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை. அதேசமயம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை நினைத்து மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த போட்டோவில் இருந்த ராப் ஜாப் தனது சிறந்த நண்பர் எனவும் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ள்ளார்.
பின்னர் ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியமும் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டது.