ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஓனர்களில் ஒருவர் நெஸ் வாடியா. இவர் தொழிலதிபர் நஸ்லி வாடியாவின் மகன் ஆவார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஓனர்களில் ஒருவர் நெஸ் வாடியா. இவர் தொழிலதிபர் நஸ்லி வாடியாவின் மகன் ஆவார்.
வட ஜப்பானில் உள்ள ஹொக்கோடியா தீவுக்கு கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி இவர் சென்றார். அப்போது அங்குள்ள புது சிட்டோஸ் விமான நிலையத்தில் இவரை பரிசோதித்த போது 25 கிராம் எடை கொண்ட போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த சப்போரோ மாவட்ட நீதிமன்றம், வாடியாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதுபற்றி வாடியா குழு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜப்பான் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வாடியா நிர்வாகத்தை பாதிக்காது. அவர் பணி எப்போதும் போல தொடரும் என்றார்.
வாடியாவுக்கு பாம்பே டையிங், பாம்பே பர்மேன், டிரேடிங், பிஸ்கெட் நிறுவனமாக பிரிட்டானியா தொழிற்சாலை. பட்ஜெட் ஏர்லைன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டின் கிங்ஸ் லெவன் பஞ்சான் அணியின் நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.