தங்க மங்கை கோமதிக்கு விஜய்சேதுபதி நிதியுதவி..!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்
கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற 3வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும் உதவியும் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி சார்பில் ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதனை விஜய் சேதுபதி சார்பில் திருச்சிக்கு சென்று விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பாளர்கள் வழங்கினர்.