ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால்

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால்

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மயங்க் அகர்வால் இந்திய அணியின் கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார் . 

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூலை 1ஆம் தேதி டெஸ்ட் போட்டி பிர்மிங்கமில் தொடங்குகிறது.

 கடந்த சில தினங்களாகவே இந்திய அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் இந்திய அணியின்  முன்னாள் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .

இதை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியது  .இதனால் ரோஹித் சர்மா பிர்மிங்கத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 

ஆகவே ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக  மயங்க் அகர்வால் இந்திய அணியின் கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார் .இவர் இந்திய அணிக்காக 21டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் நேரடியாகச் சேரவுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்