ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று
                              

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


 இந்நிலையில், இங்கிலாந்தில் ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டிக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்ந்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முன்னதாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்