நேற்று நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது .
நேற்று நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது .
இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது . இப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 43.1 ஓவரில் 160 ரன்களுக்கு மொத்த விக்கெட்களையும் இழந்தது .
இந்த ஆட்டத்தில் சமிகா கருணா ரத்னே மட்டும் 75 ரன்களை எடுத்தார் .மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் .
அடுத்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 39.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றன . ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக ஆடிய அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக ௪௫ ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றாலும் தொடரினை 3-2 கணக்கில் வெற்றிபெற்றன .
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இவ்வெற்றி என்பது 30 வருடங்களுக்குப் பின் தன் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு முன் நடந்த டி20 போட்டியை ஆஸ்திரேலியா வென்றது .அதன் பின் நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவை இலங்கை அணி வென்றது. அடுத்த டெஸ்ட் தொடரினை வெல்லப் போவது யார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது .வரும் ஜூன் 29 -ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது .