லக்னோ அணி கேப்டனாகும் கே.எல்.ராகுல்.!

லக்னோ அணி கேப்டனாகும் கே.எல்.ராகுல்.!

ஐபிஎல் 2022 தொடரில் புதிய அணிகளாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுடன் சேர்ந்து பத்து அணிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகள் ஜனவரி 22ம் தேதிக்குள் 3 வீரர்களின் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் அணி உரிமையாளர்களான சிவிசி கேபிட்டலின் உரிமையை முறையாக அங்கீகரிக்கும் செயல்முறை முடிந்ததும் காலக்கெடு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக புதிதாக களமிறங்கும் லக்னோ அணியில் கே.எல்.ராகுல், ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன் கேப்டனாகா கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேப்டனாக செயல்படவுள்ள கே.எல்.ராகுல்லுக்கு ரூ.17 கோடி சம்பளம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்