எல்லாம் எங்க தப்பு தான் : தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி குறித்து கே.எல்.ராகுல் ஓபன் டாக்

எல்லாம் எங்க தப்பு தான் : தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி குறித்து கே.எல்.ராகுல் ஓபன் டாக்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுத்தோல்வி அடைந்தது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் 2வது போட்டி நடைபெற்றது.

போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் 85 ரன்களும், இந்திய அணி கேப்டன் 55 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிர்க்கா அணி 48.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தென்னாப்பிரிக்கா அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிடி ஆர்டரில் நாங்கள் மீண்டும் சில தவறுகள் செய்துவிட்டோம். இந்த தோல்வியின் மூலம் நாங்கள் பல விஷயங்களை கற்று கொண்டோம். 

இந்த தோல்வியின் மூலம் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் தான் அதிகம் உள்ளது. தோல்வியில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவோம் என நம்புகிறோம். மிடில் ஆர்டரில் எங்களுக்கு பார்ட்னர்சிப் சரியாக அமையவில்லை. ஆனால் மிடில் ஆர்டர் பார்ட்னர்சிப் எவ்வளவு முக்கியமானது என்பதை தென்னாப்பிரிக்கா வீரர்கள் எங்களுக்கு காட்டிவிட்டனர். தவறுகளை நிச்சயம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி பெற போராடுவோம் என்று கூறினார்.

இதற்கிடையில் நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்