விராட் கோலிக்கு நோட்டிஸ் : கங்குலி மறுப்பு..!

விராட் கோலிக்கு நோட்டிஸ் : கங்குலி மறுப்பு..!

விராட் கோலிக்கு நோட்டிஸ் அனுப்ப திட்டமிட்டதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் முன்னதாகவே பரவியது. இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியது.

இதனை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி, கோலியை கேப்டன் பதவி குறித்த கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டதாக தகவல்கள் வெயியாகின. இது குறித்து கங்குலி, "விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பவிருந்ததாக வெளியான தகவல்கள் உண்மையல்ல" என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்