அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனை : 7-வது இடத்தை பிடித்த பிவி சிந்து

அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனை : 7-வது இடத்தை பிடித்த பிவி சிந்து

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2021ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் பிவி சிந்து 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் 2021 ஆம் ஆண்டு உலகின் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

முதல் பத்து பேர் வரிக்கு முன் 167 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளனர். நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா மொத்தம் 57.3 மில்லியன் டாலர் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2021-ல் 45.9 மில்லியன் டாலர் சம்பாதித்த செரீனா வில்லியம்ஸ் உள்ளார். இந்திய வீராங்கனை பிவி சிந்து 7.2 மில்லியன் டாலர் சம்பாதித்து ஏழாவது இடத்தில் உள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்