புஷ்பா அல்லு அர்ஜூன் கெட்டப்பில் அசத்தும் சார் ஜடேஜா.!

புஷ்பா அல்லு அர்ஜூன் கெட்டப்பில் அசத்தும் சார் ஜடேஜா.!

புஷ்பா அல்லு அர்ஜூன் கெட்டப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான ரவீந்திர ஜடேஜா தனது இணையப்பக்கத்தில் வெளியிட்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்கிறார். இவர் அவ்வபோது தனது இணையப்பக்கங்களில் சில பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி வெளியிடும் போஸ்ட்டுகள் வைரலாவது வழக்கம்.

அந்தவகையில் சமீபத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தின் கெட்டப் கொண்டு தத்ரூபமாக அவரை போல வசனம் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் தற்போது புஷ்பா கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், நான் புகைப்படிக்கும் பழக்கத்தை என்றைக்குமே ஆதரித்ததில்லை. இப்படத்தின் நான் புகைப்படிக்கும் பீடி கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களை உட்கொள்வது மற்றும் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப்புகைப்படம், சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி, கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்