ஐபிஎல் 2022: கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு தடையா?

ஐபிஎல் 2022: கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு தடையா?

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறு ஒரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்கு பேச்சு நடத்துவததாக கே.எல். ராகுல் மற்றும் ரஷீத் கான் இருவர் மீது எழுந்த புகாரின் பேரில் அவர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 30-ம் தேதி ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் பஞ்சாப் கிங்ஸ் 2 உள் நாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. 

அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 14 கோடிக்கு கேன் வில்லியம்சன், ரூ. 4 கோடிக்கு அப்துல் சமத், ரூ. 4 கோடிக்கு உம்ரான் மாலிக் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாய்மொழியாக பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளன.

அதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறு ஒரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்கு பேச்சு நடத்தியதாகவும் அதிக விலைக்கு வாங்குவதாக வீர்ரகளுக்கு ஆசை காட்டி இழுக்க பார்த்ததாக லக்னோ அணி மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த புகார் உண்மை என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராகுல் ரூ. 11 கோடியும் ரஷீத் கான் ரூ. 9 கோடியும் பெறுகின்றனர். இந்நிலையில் லக்னோ அணி ராகுலுக்கு ரூபாய் 20 கோடியும் ரஷீத் கணக்கு ரூ. 16 கோடியும் தர முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்