ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் இந்திய அணி.!

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் இந்திய அணி.!

ஜூனியருக்கான உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி பெல்ஜியம் அணியை வீத்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 4வது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 21வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. பெனால்டி கார்னர் வாய்ப்பை திவாரி கோலாக அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து ஜெல்ஜியம் அணி பதிலுக்கு கோல் அடிக்க போராடியது . ஆனால் இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் எதிரணியால் கோல் அடிக்க இயலவில்லை.

இதனால் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. 

அரையிறுதியில் இந்திய அணி பலமான ஜெர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்