கான்பூர் டெஸ்ட்: வெற்றிக்கு போராடும் இந்திய அணி.!

கான்பூர் டெஸ்ட்: வெற்றிக்கு போராடும் இந்திய அணி.!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 345 ரன்களும் நியூசிலாந்து அணி 292 ரன்களும் எடுத்தன. 

இதனால், 63 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளயர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 90 ஓவர்களில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பிடியில் இருந்து நியூசிலாந்து அணி தப்புவது கடினம்.

Find Us Hereஇங்கே தேடவும்