சேப்பாக்கத்தில் விரைவில் தோனிக்கு பாராட்டு விழா : சிஎஸ்கே உரிமையாளர் அறிவிப்பு

சேப்பாக்கத்தில் விரைவில் தோனிக்கு பாராட்டு விழா : சிஎஸ்கே உரிமையாளர் அறிவிப்பு

சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஐபிஎல் போட்டியில் வென்ற கோப்பையை சென்னை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்தார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை முடிந்தவுடன் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் போட்டியில் வென்ற கோப்பையைத் தமிழக முதல்வரிடம் அளிப்பார்.

உலகக் கோப்பை முடிந்து தோனி நாடுதிரும்பியவுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். அதில் சிஎஸ்கே ரசிகர்களும் கலந்துகொள்ள முடியும் என்று கூறினார்.

மேலும் பேசுகையில், தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று பிசிசிஐ போடும் விதிமுறைகளை பொறுத்தே அமையும். ஆனால் சென்னை அணியில் நிச்சயம் தோனி இடம் பெறுவார் என்று தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்