இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய, இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். அந்த் அணியின் அதிகபட்சமாக ஜானி பேட்ஸ்டோ 49 ரன்கள் எடுத்தார். 

இதனை தொடர்ந்து கடைசியில் மொயீன் அலி அதிரடி காட்ட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிறகு 188 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய மொயீன் அலி 20 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ரன்கள் குவித்தார். 

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. 24 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். 

இவரை தொடர்ந்து களமிரங்கிய கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து விக்கெட் பறி கொடுத்த போதிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிஷன் 46 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார்.

பின்னர் சிறிய காயம் காரணமாக கிஷானால் போட்டியை தொடர முடியாமல் போகிவிட்டது. ஆனாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பண்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Find Us Hereஇங்கே தேடவும்