சிங்கம் களமிறங்கிடிச்சு... இந்திய அணியுடன் இணைந்த தோனி.!

சிங்கம் களமிறங்கிடிச்சு... இந்திய அணியுடன் இணைந்த தோனி.!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் தல தோனி இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டு வரும் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள முதல் பிரதான சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்ற தோனி கோப்பையை வென்று மீண்டும் மாஸ் கட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக தோனி துபாயில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் நேற்று இணைந்துள்ளார். 

இது தொடர்பாக பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் தோனி இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளது. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்