இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்!..

இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்!..

சவுராஷ்டிரா அணியின் விக்கெட் கீப்பரும், 16 வயதுக்குட்போருக்கான அணியின் முன்னாள் கேப்டனுமான அவி பரோட் மாரடைப்பால் மரணத்தை தழுவியுள்ளார்

29 வயதேயாகும் அவி பரோட், 38 முதல் தரப் போட்டிகளிலும், 21 ரஞ்சிக்கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில், திடீரென வந்த மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது இழப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்துள்ளது.

பரோட்டைப் போன்றே அவரது தந்தையும் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், பரோட்டின் மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கவை.

Find Us Hereஇங்கே தேடவும்