ஐபிஎல் தொடரில் சின்ன தல ரெய்னாவின் புதிய மைல்கல்.!

ஐபிஎல் தொடரில் சின்ன தல ரெய்னாவின் புதிய மைல்கல்.!

சென்னை மற்றும் பொங்களூரு அணிகளுக்கு இடையிலான நேற்றைய லீக் போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்ன ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் 2021ம் ஆண்டிற்கான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் கடைசி வரை சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆட்டமிழக்காமலிருந்தனர். சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் ரெய்னா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 5,500 ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவன் ஏற்கெனவே எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்