போராடி தோல்வியடைந்த சிங்கப்பெண்கள் ... ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி.!

போராடி தோல்வியடைந்த சிங்கப்பெண்கள் ... ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி.!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருத்தி மந்தனா 86 ரன்கள் குவித்தார். 

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 3 பந்துகளை சந்தித்த ஹேலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தஹ்லா மெக்ராத் மற்றும் மோனி இந்திய வீராங்கனைகளின் பந்துகளை விட்டு விளாசினர். இருவரும் பொருப்புடன் விளையாடி ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் மெக்ராத் 74 ரன்கள் குவித்தார். 

இதனை தொடர்ந்து கடைசி ஓவரிக் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது. இந்திய வீராங்கனை கோஸ்வாமி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது  அவர் வீசிய கடைசி பந்து நோ-பால் ஆக அறிவிக்கப்பட்டது. 

இதனால் 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை சந்தித்த ஆஸ்திரேலிய விராங்கனை ஹேரி 2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோனி 125 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்