அடி பொலி... பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் டாப்.!

அடி பொலி... பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் டாப்.!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் முதல் 10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்த பெங்களூரு அணி அடுத்த 10 ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியாமல் திணறி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. 

இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட் (38) மற்றும் டு பிளசிஸ் (31) தங்கள் பங்கிற்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 23 ரன்களும், அம்பதி ராயுடு 32 ரன்களும் எடுத்தனர். கடைசியில் சுரேஷ் ரெய்னா 20 ரன்களும், தோனி 7 ரன்களும் எடுத்து களத்தில் நின்று சென்னை அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 18.1 ஓவர்கள் இருக்கும் போது 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. 

இந்த வெற்றி பெற்றதன்மூலம் சென்னை அணி 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. இன்னும் 1 போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்