ஹெல்மெட்டுடன் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஹூடா.!

ஹெல்மெட்டுடன் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஹூடா.!

ஐபிஎல் 2021 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் 32வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்கலை குவித்தது. அதனை அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 186 ரன்கள் என்ற இலக்கினை துரத்தி 183 ரன்கள் குவித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவன் பட்டியலை வெளியிடும் முன் ஹெல்மெட் அணிந்தபடி பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா புகைப்படம் பதிவிட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எனவே இவரது இந்த புகைப்படம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக பிசிசிஐ தடுப்பு குழு தற்போது சில நிர்வாகிகளை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்