8 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றி.!

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றி.!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021யின் மிஞ்சியுள்ள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவிக் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணிக்காக ககிசோ ரபடா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை சிறப்பாக விளையாடிய தவான் 42 ரன்களுக்கு அவுட்டானார். 

தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும், கேப்டன் ரிஷப் பந்தும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து அணியை வெற்றி பாதைக்கு செல்ல வழிவகுத்தன.

இதன்மூலம் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஸ்ரேயாஸ் ஐய்யர் 47 ரன்களுடனும், ரிஷப் பந்த் 35 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் மீண்டும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றது.

Find Us Hereஇங்கே தேடவும்