பேட்டிங் பிரிவில் மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை..!

உலக தரவரிசை பட்டியல் பேட்டிங் பிரிவில் மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை..!

உலக தரவரிசை பட்டியலில் பேட்டிங் பிரிவில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மேக்கேயின் ஹாரூப் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அரை சதத்துடன் 20,000 ரன்களை நிறைவு செய்துள்ளார். 

இதன்படி, மிராலி ராஜ், ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக தன்னுடைய 5வது அரை சதத்தை அடித்து புதிய மைல்கல்லை எட்டினார். இதையடுத்து, உலக தரவரிசை பட்டியலின் பேட்டிங் பிரிவில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்