ஆர்.சி.பி-92 : வைரலாகும் தீபிகா படுகோனே ட்வீட்.!

ஆர்.சி.பி-92 : வைரலாகும் தீபிகா படுகோனே ட்வீட்.!

ஆர்சிப் 92 இதெல்லாம் ஒரு ஸ்கோரா என்ற திபிகா படுகோனேவின் ட்வீட் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாம் கட்ட போட்டியின் நேற்றைய லீக் போட்டியில்  பெங்களூரூ மற்றும், கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இந்நிலையில் ஆர்பிசி அணியை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 2010-ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட்டை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின்போது, பெங்களூரு அணி ராஜஸ்தானை வெறும் 92 ரன்களுக்கு வீழ்த்தியது. 

அப்போது தீபிகா படுகோனே, “92 !! இதெல்லாம் ஒரு ஸ்கோரா !? நிறைய தூரம் செல்ல வேண்டும் ஆர்சிபி! எப்பொழுதும் உங்களுடன்... ஒவ்வொரு நொடியும் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! " என்று பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்