லம்போகினி காரை விற்பனைக்கு கொடுத்த விராட் கோலி...

லம்போகினி காரை விற்பனைக்கு கொடுத்த விராட் கோலி...

விராட் கோலியின் லம்போகினி காரை விற்பனைக்காக கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கார் பிரியர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இவர் கடந்த 2015ம் ஆண்டு லம்போகினி காரை வாங்கினார். இது தற்போது விற்பனைக்காக கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் இந்த ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு காரை ரூ.1.35 கோடிக்கு விற்கப்போவதாக விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த கார் குறித்து ஷோரூம் ஊழியர் கூறுகையில், “இந்த கார் 2013ம் ஆண்டு மாடல். இதனை விராட் கோலி வெறும் 10,000 கிலோ மீட்டர் வரைத் தான் ஓட்டியுள்ளார்.

 இந்த கார் ஸ்டார்ட் ஆகி 4 விநாடிகளிலேயே 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சுமார் 324 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியதுதான் இந்த லம்போகினி எனத் தெரிவித்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்