92 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரூ அணி : கொல்கத்தா அசால்ட் வெற்றி.!

92 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரூ அணி : கொல்கத்தா அசால்ட் வெற்றி.!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் போட்டியில் பெங்களூரூ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி. 

ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாம் கட்ட போட்டிகள் நேற்று முந்தினம தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய லீக் போட்டியில்  பெங்களூரூ மற்றும், கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் ரன்கள் எடுக்க தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.இதனை தொடர்ந்து பெங்களூரு அணி இறுதியில் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 

அதிரடியாக விளையாடிய வந்த சுப்மான் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Find Us Hereஇங்கே தேடவும்