ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு நோ சொல்லும் கோலி...

ஆர்.சி.பி கேப்டன் பொறுப்புக்கு நோ சொல்லும் கோலி...

ஐபிஎல் 2021க்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து  விதமான போட்டிகளின் கேப்டனாக இருந்து வருபவர் விராட் கோலி. இந்த நிலையில் வேலை பளுக்காரணமாக துபாயில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக தான் தொடர போவதில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் இந்த ஆண்டுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் விராட் கோலி பேசுகையில், ’ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுதான் என்னுடைய கடைசி ஐ.பி.எல். என்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டி வரையில் நான் பெங்களூரூ அணியின் வீரனாக தொடர்வேன். எனக்கு ஆதரவு மற்றும் எனனை நம்பிய அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி’என்று தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆர்சிபி என கேப்டன்ஷிப்பில் இருந்து கோலி விலகுவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்