மும்பை அணியை பழிதீர்த்த சென்னை அணி... 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

மும்பை அணியை பழிதீர்த்த சென்னை அணி... 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2ம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டு பிளிசிஸ் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயீன் அலியும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். 3-வது ஓவரில் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக வெளியேறினார். இதனை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சின்ன தல சுரேஷ் ரெய்னா, தல கேப்டன் தோனி இருவரும் அடுத்தடுத்து சொர்ப ரன்களில் அவுட்டாகினர். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

அவருக்கு துணையாய் நின்ற ஜடேஜா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பிராவோ இறுதி ஓவர்களில் 3 சிக்சர்கள் விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை நிலைத்து நின்ற ருதுராஜ் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. 

இதற்கிடையில் அதிரடியாக ரன் சேர்த்த டி காக் 17  ரன்களும், அன்மோல்பிரித் சிங் 16  ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து  கடைசி ஒவரில் வெற்றிபெற 23 தேவைப்பட்டது. அப்போது சென்னை வீரர்களின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் ஆடம் மில்னே ராகுல் சாஹர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் திவாரி 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்