ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் இன்று தொடக்கம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் இன்று தொடக்கம்: சென்னை-மும்பை அணிகள் மோதல்
துபாயில் இன்று நடைபெறவிருக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய 14வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. அப்போது கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மே 3ஆம் தேதியுடன் கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன.

இந்த நிலையில், எஞ்சிய 31 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. துபாயில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் அங்கம் வகிக்கும் சென்னை அணி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் மோதுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்