கொரோனா நோய்க் கிருமி பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தங்கவேலு மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்: தங்கவேலு மாரியப்பன் கொடியெந்தி வழிநடத்துவதில் சிக்கல்?
டோக்கியோ பாராலிம்பிக் இன்று தொடங்கவுள்ள நிலையில் கொரோனா நோய்க் கிருமி பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தங்கவேலு மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தங்கவேலு மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால், பாராலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணியை கொடியெந்தி வழிநடத்தும் பொறுப்பை இழந்துள்ளார். அவருக்கு பதிலாக அப்பொறுப்பை ஆசிய விளையாட்டுகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேக்சந்த் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்-கில் பங்கேற்க விமானத்தில் வருகையில் உடன் பயணித்த சக பயணிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்த வேண்டிய கட்டயாத்தினால் தங்கவேலு மாரியப்பன் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.