டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் ஒளிவு மறைவின்றி எல்.ஜி.பி.டி.-யாக தன்னை அறிவித்துக்கொண்ட 28 வீரர்கள் பங்கேற்பு.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தன்னை வெளிப்படையாக எல்.ஜி.பி.டி. சமூகம் என அறிவித்துக்கொண்ட 28 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 25 வரை நடைபெறவிருக்கும் பாராலிம்பிக்ஸில், எல்.ஜி.பி.டி. சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விதமாக 28 பாராலிம்பிக் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த எண்ணிக்கை ரியோ பாரலிம்பிக்கை காட்டிலும் இரு மடங்காகும். மேலும், அவ்வீரர்களில் அதிகபட்சமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி, வெளிப்படையாக தன்னை எல்.ஜி.பி.டி-யாக அறிவித்து கொண்டவர்களில் ஒருவர் மட்டுமே ஆண் என்பதும் குறிப்பிடதக்கது.
நடந்துமுடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 185 எல்.ஜி.பி.டி. வீரர்கள் கலந்துகொண்டனர் என்பதும், இந்த எண்ணிக்கையும் கடந்த ரியோ ஒலிம்பிக்கை காட்டிலும் மும்மடங்காகும் என்பதும் கவனிக்கதக்க ஒன்று.