கொரோனாவின் ருத்ரதாண்டவம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது!

கொரோனாவின் ருத்ரதாண்டவம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது!
கொரோனாவின் ருத்ரதாண்டவம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகரில்  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது ஜப்பான் அரசாங்கம். அதனால் வரும் 23ஆம் தேதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டிகளை கண்டு களிக்க  பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு நடத்திய ஆலோசனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதனை டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் Seiko Hashimoto உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com