அடுத்த மே மாதம் 30ஆம் தேதி தொடங்க இருக்கும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்க
அடுத்த மே மாதம் 30ஆம் தேதி தொடங்க இருக்கும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30ஆம்தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்கள் குறித்து வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணி, வரும் ஏப்ரல் 15ஆம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தற்போது தெரிவித்துள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ஆம் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.