ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பை எட்டியுள்ளது. இத்தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பை எட்டியுள்ளது. இத்தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி சார்பாக தொடக்க வீரர்களாக ரஹானேவும் ஜாஸ் பட்லரும் களமிறங்கினர். ரஹனே 5 ரன்களில் நடையை கட்டினார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கனார்.
ஸ்மித்தும் பட்லரும் இணைந்து ராஜஸ்தான் அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய பட்லர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் தன் பங்கிற்கு அணிக்காக அரை சதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கிறிஸ் லிண்ணும் சுனில் நரைனும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர்.
சுனில் நரைன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கிறிஸ் லிண் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.இவரும் ஆட்டமிழக்க பின்னர் இனைந்த உத்தப்பாவும் கில்லும் இணைந்து 13.5 ஓவரிகளில் வெற்றி இலக்கை எட்டினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளது.