சாம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல் சாதனை..!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல் சாதனை..!

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தன. கடைசி நாளான நேற்று (ஜூன் 13) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5ஆம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர். இரு செட்களிலும் பின் தங்கி இருந்த ஜோகோவிச் மனம் தளராமல் அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

4 மணி 11 நிமிடங்கள் நீடித்த நிலையில், இறுதியாக சிட்சிபாசை போராடி 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கோப்பையை கைப்பற்றினார் ஜோகோவிச்.

களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டியில், ஜோகோவிச் 2-வது முறையாக வெற்றிவாகை சூடி இருக்கிறார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டிலும் இங்கு அவர் வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்