கோலி புகைப்படத்தை பகிர்ந்த ஜான் சேனா... மீண்டும் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!

கோலி புகைப்படத்தை பகிர்ந்த ஜான் சேனா... மீண்டும் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு மல்யுத்த வீரரான ஜான் சேனா பகிர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் புகைப்படம் தற்போது மீண்டும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த வீரராக வலம் வருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரை ‘ரன் மிஷின்’ என்ற அடைமொழியுடன் பல கிரிக்கெட் ஜாம்பவான்களால் வர்ணித்தது உண்டு. அந்த அளவிற்கு மிக நுணுக்கமாகவும், உத்வேகத்துடனும் ஆடி ரன்களை குவிக்கும் திறமை படைத்தவர். களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் அதிரடி காட்டும் கேப்டன் கோலி சர்வதேச அளவில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து வருகிறார். இதனாலே உலகம் முழுதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதோடு பல இந்திய இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும் உள்ளார்.

கேப்டன் கோலிக்கு உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் அமெரிக்க மல்யுத்த வீரரான ஜான் சேனாவும் ஒருவர். இதை அவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு எதையும் எழுதவில்லை.

இந்த நிலையில், 16 முறை WWE சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஜான் சேனாவின் இந்த பழைய பதிவு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்