ஸ்டம்ப்பை தூக்கி பிட்ச்சில் அடித்த வீரர்: வேற யாரும் இல்ல உலகின் சிறந்த ஆல் ரவுண்டர் தான்.

ஸ்டம்ப்பை தூக்கி பிட்ச்சில் அடித்த வீரர்: வேற யாரும் இல்ல உலகின் சிறந்த ஆல் ரவுண்டர் தான்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரில் களத்தில் நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் மோசமாக நடந்து கொண்டதற்கு வங்கதேச அணியின் வீரர் ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கோரியுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியான டாக்கா லீக் போட்டியில் முஹம்மதின் ஸ்போர்ட் கிளப் அணிக்கும் அபஹனி லிமிடெட் அணிக்கும் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஷகிப் வீசிய பந்திற்கு எல்.பி.டபுள்யூ அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததால் ஆத்திரத்தில் ஸ்டம்ப்பை எட்டி உதைத்தார். இது அங்கிருந்த வீரர்களையும், ரசிகர்களையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும் அடுத்ததாக 5.5 ஓவரின் கடைசி பந்தை பௌலர் வீச வந்தபோது மழை குறிக்கிட்டதாக கூறி நடுவர் அனைவரையும் டக்-அவுட்டிற்கு போகும்படி அறிவுறுத்தினார். இதனால் கடும் கோபமடைந்த ஷகிப் நடுவர் அருகில் வந்து ஸ்டம்ப்களை எடுத்து பிட்ச்சிற்கு நடுவே வேகமாக அடித்தார். இந்த செயல் அனைவரையும் அதிரிச்சியில் ஆழ்த்தியது. ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியில் மிக முக்கிய அனுபவம் வாய்ந்த வீரர். மேலும் அவர் சர்வதேச அரங்கில் சிறந்த ஆல் ரவுண்டர் அப்படி இருக்கையில், அவரே ஆட்டத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் நடந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்