கொரோனா அறிகுறி: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்

கொரோனா அறிகுறி: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்
கொரோனா அறிகுறி: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்

கொரோனா அறிகுறிகள் கொண்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா அறிகுறிகள் கொண்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஐபிஎல் தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக விலகினார். 

தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப் பயணம் மேற்கொளும் இந்திய டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் டி20 அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரூட்டில் தனது குடும்பத்தினருடன் உள்ள புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர். 

கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டிவா, பாசிட்டிவா என இதுவரை தெரியப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com