ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வங்கதேச வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வங்கதேச வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 2021 ஐபிஎல் சீசன் தொடங்கியது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிசிசிஐ சிறப்பு கூட்டத்தில் செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதனால் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிகிறது.