நவ்தீப் சைனியும் ஹார்லி-டேவிட்சன் பைக்கும் : வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து விச்சாளர் நவ்தீப் சைனி அவரது ஹார்லி டேவிட்சன் பைக்குடன் வெளியான சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து விச்சாளர் நவ்தீப் சைனி அவரது ஹார்லி டேவிட்சன் பைக்குடன் வெளியான சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
28 வயதான நவ்தீப் சைனி இந்தியா அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சைனி தனது ஹார்லி- டேவிட்சன் பைக்குடன் இருக்கும் வீடியோ ஒன்றை அவரது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் பயத்தை உணர என் பைக்கில் என்னுடன் செல்லுங்கள் என்று குறிப்பிட்டு அந்த பைக்கின் வேகத்தை கூட்டி புழுதி பரக்க செய்கிறார். இந்த பதவு இணையத்தில் வேகமாக பரவி பல லட்ச பார்வைகளை குவித்துள்ளது.
ஆனாலும் சில நெட்டிசன்கள் பைக்கில் இருந்து புகையை அதிகளவில் கக்கவிடுவதால், உங்களை போன்ற பிரபலம் இவ்வாறு காற்று மாசுவுக்கு துணை போகக் கூடாது என சிலரும், கொரோனா பரவி வரும் காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட பதிவுகள் அவசியமான சிலரும் சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளனர்.